வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் ஜெயலலிதாவுடன் நடித்த நடிகை!


கனவுத்தொழிற்சாலையான திரையுலகில் பகட்டான வாழ்க்கை, பலகோடி சொத்துக்களுடன் வாழும் நட்சத்திரங்கள் ஒருசிலர் இருந்தாலும், இதே திரையுலகில்தான் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்படும் தொழிலாளர்களும் உள்ளனர். இந்த நிலையில் ஒரு காலத்தில் ஜெயலலிதா, சிவகுமார் ஆகியோர்களின் படங்களின் குரூப் டான்சராக இருந்த ஜமுனா என்பவர் தற்போது வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கின்றார். 80வயதான ஜமுனா என்ற இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்த 'மோட்டார் சுந்தரம்பிள்ளை', சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த 'சரஸ்வதி சபதம்', அவ்வையார் உள்பட பல படங்களில் குரூப் டான்ஸ் ஆடியவர் நான். என்னுடைய கணவர் மேக்கப்மேனாக இருந்தவர். குரூப் டான்சராக இருந்தபோது ஓரளவுக்கு வசதியாக இருந்த நான், குடும்பத்தினர் ஒவ்வொருவராக வெறுத்து ஒதுக்கியதால் தற்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவகுமார், கமல்ஹாசன் போன்றவர்கள் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தனர். ஆனால் அதன்பின்னர் அவர்களிடம் நான் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தன்னால் எழுந்து நடமாட கூட முடியாமல் கையேந்தும் நிலையில் இருப்பதாகவும், தனக்கு விஷால் உதவி செய்ய வேண்டும் என்றும் இறுதியில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நலிந்த நடிகர், நடிகைகள் பலருடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள விஷால், இந்த வயதான டான்சர் ஜமுனாவுக்கும் உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment