IPL தொடரின் 8 ஆவது போட்டியில் நேற்று(10) பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் இண்டோர் மைதானத்தில் மோதின. ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்த இப்போட்டியில் பஞ்சாப் அணி இலகுவான வெற்றி ஒரைப் பதிவுசெய்துள்ளது.
நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி ஆரம்பத்தில் அடுத்ததடுத்து விக்கெட்களை இழந்தாலும் டீ வில்லியர்ஸ் இன் அதிரடி ஆட்டம் காய் கொடுக்க 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. டீ வில்லியர்ஸ் வெறுமனே 46 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள் 9 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 89 ஓட்டங்களை பெற்று கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்த்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்களால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் அம்லா 58 ஓட்டங்களையும் மக்ஸ்வெல் 43 ஓட்டங்களையும் வோஹ்ரா 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
இப்போட்டியில் இரு அணி வீரர்களும் சேர்ந்து மொத்தமாக 20 ஆறு ஓட்டங்களை அடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தனர். குறிப்பாக டீ வில்லியர்ஸ் இன் வருகை ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்தது.

0 comments:
Post a Comment