மன்னார் பஸார் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்து, மின் ஒழுக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள சந்தை வியாபார கட்டிடத்தொகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து புகை வெளியேறியுள்ளது.
இதனைய அவதானித்த குறித்த பல்பொருள் விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள கடை உரிமையாளர், இது தொடர்பில் குறித்த பல்பொருள் விற்பனை நிலைய உரிமையாளரிடம் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு வந்த பல்பொருள் விற்பனை நிலைய உரிமையாளர், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
எனினும் குறித்த விற்பனை நிலையத்தினுள் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.




0 comments:
Post a Comment