மக்கலத்தின் அதிரடி வீண்போக, குஜராத் லயன்சை போராடி வென்றது மும்பை!


இன்று(16) பிற்பகல் இலங்கைநேரப்படி நான்கு மணியளவில் இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் பதினாறாவது போட்டியில் பலம் பொருந்திய மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகியன மோதிக்கொண்டது.

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் மக்கலத்தின் அதிரடி ஆட்டத்தின் துணையுடன் இருபது ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப்பெற்றது. இதில் மக்கலம் ஆறு பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் அடங்கலாக 44 பந்துகளில் 64 ஓட்டங்களையும் தினேஸ் கார்த்திக் 26 பந்துகளில் இரு பவுண்டரிகள் இரு சிக்சர்கள் அடங்கலாக 48 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். பந்து வீச்சில் மெக்லிங்கன் இரு இலக்குகளையும் மலிங்க மற்றும் ஹர்பஜன் சிங் தலா ஒவ்வொரு இலக்கினையும் சாய்த்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பைக்கு ஆரம்பம் சற்று மோசமாக இருந்தாலும் பின்னர் களம்புகுந்த ரானா அரைச்சதம் அடித்து அசத்தினார். இவர் நான்கு பவுண்டரிகள் இரு சிக்சர்கள் அடங்கலாக 36 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்றார். ஆரம்ப ஆட்டங்களில் மோசமாக துடுப்பெடுத்தாடிய ரோகித் சர்மா இன்று வெற்றிக்கு வழியமைத்திருக்கிறார். இவர் மூன்று பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கலாக 29 பந்துகளில் பெறுமதியான 40 ஓட்டங்களைப் பெற்று இறுதிவரை களத்தில் இருந்தார். இறுதியில் மும்பை அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் ரை இரு இலக்குகளையும் முனாப் பட்டேல மற்றும் பிரவீன் குமார் தலா ஒவ்வொரு இலக்கினையும் சாய்த்தனர். கடந்த நான்கு போட்டிகளிலும் ஒற்றை இலக்ங்களுடன் நடையைக்கட்டிய ரோகித் சர்மா இன்று போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்தமை மும்பை ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான விடயமே.இப் போட்டியின் ஆட்ட நாயகனாக நிகிஸ் ரானா தெரிவானார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment