இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 தொடர் ஆரம்பமாகியுள்ளது.
ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மோர்தசா முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார்.
குறித்த போட்டியின் நாணய சுழற்சி நிறைவுக்கு வந்தவுடன் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் மஷ்ரபி மோர்தசா திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
இலங்கை அணியுடனான 2 போட்டிகள் கொண்ட தொடருடன் T20 போட்டிகளுக்கு விடைகொடுப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் ஓய்வுபெற்ற இவர், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment