இந்தியாவில் இடம்பெறவுள்ள 10 வது IPL தொடரில் உபாதைகள் மற்றும் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக பல முக்கிய வீரர்கள் விலகிக்கொண்டுள்ளனர்.
இவர்களுள் பல வெளிநாட்டு வீரர்களும், அணியின் வெற்றிகள் பலவற்றுக்கு காரணமான வீரர்களும் உள்ளடங்குகின்றனர். மொத்தமாக இதுவரை 16 வீரர்கள் விலகியுள்ளார்.
ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியின் முக்கிய வீரரான கெவின் பீட்டர்சன் முதல் வீரராக இம்முறை இடம்பெறவுள்ள IPL தொடரில் விளையாடமாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்தார்.
அதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் புயல் வேகப்பந்து வீச்சாளரும், ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரருமான மிட்சல் ஸ்ட்ராக், அதேபோன்று ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியின் சகலதுறை வீரர் மிட்சல் மார்ஸும் உபாதைகள் காரணமாக தொடர் முழுவதும் விளையாட முடியாது என்று அறிவித்தனர்.
தென் ஆபிரிக்க வீரர்களான JP டுமினி((டெல்லி டேர்டெவில்ஸ்) தனிப்பட்ட காரணங்கள் காரணமாகவும், குயிண்டன் டி கொக் (டெல்லி டேர்டெவில்ஸ்) உபாதைகளை காரணமாகவும் விலகுவதாகவும் அறிவித்தனர்.
அதன்பின்னர் இந்தியாவின் முக்கிய வீரர்களான விராட் கோஹ்லி (ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்), லோகேஷ் ராகுல் (ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்), முரளி விஜய் (பஞ்சாப்) , ரவிசந்திரன் அஸ்வின் (ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ், உமேஷ் யாதவ்(கொல்கொத்தா ), ரவீந்திர ஜடேஜா (குஜராத் லயன்ஸ்) ஆகியோரோடு இளம் வீரர்களான சிரேயாஸ் ஐயர் (டெல்லி டேர்டெவில்ஸ்), சஃபிராஸ் கான் (ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்) ஆகிய வீரர்களும் உபாதையடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரரும் குஜராத் லயன்ஸ் அணியின் டிவைன் பிராவோ, அத்தோடு இலங்கை அணித்தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ்(டெல்லி டேர்டெவில்ஸ்) , தென் ஆபிரிக்க அணியின் தலைவர் டி வில்லியர்ஸ் (ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்) ஆகிய வீரர்களும் உபாதையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதிலே விராட் கோஹ்லி, மத்தியூஸ் ,பிராவோ,ஜடேஜா, உமேஷ் யாதவ்,சிரேயாஸ் ஐயர் ,டி வில்லியர்ஸ் ஆகியோரால் ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் விளையாட முடியாதாயினும், பின்னர் போட்டிகளில் பங்கேற்பார்கள் எனவும் அறியப்படுகின்றது.

0 comments:
Post a Comment