இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் நாளை இலங்கைக்கு எதிராக தனது முதலாவது போட்டியை நாளை ஆர் பிரேமதாசவில் எதிர்கொள்ள காத்திருக்கின்றது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில் நாளை தனது முதலாவது இருபது இருபது போட்டியில் இலங்கையை சந்திக்கவுள்ளது.
இதுவரை இலங்கை மற்றும் பங்களாதேஷ் விளையாடிய இருபது இருபது போட்டிகளை எடுத்து நோக்கினால் மொத்தமாக ஐந்து போட்டிகளிலேயே விளையாடியுள்ள நிலையில் அதில் நான்கு போட்டிகளில் இலங்கையும் ஒரே ஒரு போட்டியில் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் முதல் முதலாக இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு இடம் பெற்ற உலககிண்ண போட்டியிலேயே விளையாடிள்ளன. எனினும் இலங்கை அணியே அந்த போட்டியில் அறுபத்துநான்கு ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டியானது மிர்பூரில் கடந்த ஆண்டு இடம் பெற்றிருக்கிறது. இதில் பங்களாதேஷ் இருபத்துமூன்று ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளும் நாளை தமது ஆறாவது போட்டியில் ஒன்றை ஒன்று எதிர்கொள்ளவுள்ளது.இரு அணிகளும் சம பலமாகத்தான் உள்ளது. எனினும் இலங்கையின் அனுபவம் மற்றும் சொந்த ஆடுகளம் ஆகியன இலங்கைக்கு சாதகமாகவே காணப்படுகின்றன. எனினும் இப்போட்டியில் வங்கதேசம் இலங்கைக்கு சவால் வழங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை………

0 comments:
Post a Comment