இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான T20 தொடருக்குரிய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடர் போன்று அணித்தலைமை உப்புல் தரங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இளம் வீரர் குசல் மெண்டீசுக்கு அணியில் வாய்ப்பில்லை.ஒருநாள் தொடரில் காட்டிய திறமையின் காரணமாக சகலதுறை வீரர் திசார பெரேரா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
அணி விபரம்.
உப்புல் தரங்க (தலைவர்), டில்ஷான் முனவீர, தனுஷ்க குணதிலக, குசல் பெரேரா (உடற்கூற்று பரிசோதனைக்காக), லசித் மலிங்க, இசுரு உடான ,நுவான் குலசேகர, தசுன் சானாக , விகும் சஞ்சய, மிலிந்த சிறிவர்தன, அசல குணரத்ன, சீக்குகே பிரசன்ன, சாமர கப்புகெதர ,திஸர பெரேரா, லக்ஷன் சந்தகன்,சேஹான் ஜயசூரிய .
எதிர்வரும் 4 ம், 6 ம் திகதிகளில் ஆர் .பிரேமதாசா மைதானத்தில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

0 comments:
Post a Comment