ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் தனுஷ் இயக்குனராக அறிமுகமாகி நடித்திருக்கும் ப. பாண்டி படத்தின் திரை விமர்சனம்
கதை சுருக்கம்:
பரபரப்பான இந்த நவீன உலகில் முதியோர்கள் எப்படி பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள்? பிள்ளைகள், பேரன், பேத்திகளே உலகம் என இருக்கும் அவர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறார்களா? இந்த கேள்வியே ப. பாண்டி படத்தின் கதை சுருக்கம்.
# எப்படி இருக்கு?
வாட்ஸ் அப் மெசேஜில் அனுப்பிவிட கூடிய ஒரு கதையை எல்லோரும் ரசிக்கும்படி ஒரு படமாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் தனுஷ்.
ஆரம்பத்தில் சீரியல் பார்ப்பதுபோல் இருந்தாலும் போகபோக காட்சிகளை விறுவிறுப்பாக்கி படத்தை ரசிக்கும்படி செய்திருக்கிறார்.
ஒரு மாஸ் ஹீரோவிடம் இப்படியொரு மென்மையான கதை நிச்சயம் வரவேற்கத்தக்கது.
# நடிப்பு:
டைட்டில் ரோலில் ராஜ்கிரண். மார்கெட்டில் வம்பு செய்பவர்களிடம் கம்பீரமாக முறைப்பதும், பையனிடம் திட்டு வாங்கும்போது குழந்தை போல மூஞ்சை மாற்றிக்கொள்வதுமாக படம் முழுக்க ஒன் மேன் ஷோ காட்டுகிறார்.
கடைசி அரை மணிநேரமே வந்தாலும் ரேவதி அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார் ரேவதி.
பிரசன்னா, சாயா சிங், மடோனா செபாஸ்டியன், வித்யூலேகா என படத்தில் ஏகப்பட்ட நட்ச்சத்திரங்கள். எல்லோரும் இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்கள். நடிகர் தனுஷும் ஓகே.
# தொழில்நுட்பம்:
சியான் ரோல்டனின் பாடல்கள் படத்தை நகர்த்தி சென்றாலும் பின்னணி இசை இன்னும் மென்மையாக வருடும்படி இருந்திருக்கலாம்.
வேல்ராஜின் ஒளிப்பதிவும் பிரசன்னாவின் எடிட்டிங்கும் கதைக்கு நியாயம் செய்திருக்கிறது.
# ப்ளஸ்:
- படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பவர் பாண்டி.. சாரி, ராஜ்கிரண்தான். இரண்டாம் பாதியில் அவர் செய்யும் சேஷ்டைகள் அனைத்தும் அட்டகாசம்.
- ராஜ்கிரனிண் பேரனாக நடித்திருக்கும் மாஸ்டர் ராகவ் பேசும் அத்தனை பன்ச்களுக்கும் தியேட்டரில் சிரிப்பி மழை.
- முதியோர்களின் உலகத்தை முடிந்தளவு நியாயமாக காட்சிப்படுத்தி இருப்பது ஆறுதல்.
# மைனஸ்:
- தனுஷ், மடோனா செபாஸ்டியன் வரும் காட்சிகள் படத்துடன் சரியாக ஒட்டவில்லை.
- முதல் பாதியின் சில காட்சிகள் சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது மைனஸ்.
மொத்தத்தில், ப. பாண்டி குடும்ப ரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்துவான்.

0 comments:
Post a Comment