இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும் சகலதுறை வீரருமான அஞ்சேலோ மத்தியூஸ், IPL டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உபாதைகளால் அவதிப்பட்டு வந்த மத்தியூஸ், இலங்கை அணி பங்கெடுத்த போட்டிகளில் அண்மைய நாட்களில் பங்கெடுக்கவில்லை.
தென் ஆப்பிரிக்காவுடனனான ஒருநாள் போட்டித்தொடர், அதன்பின்னரான ஆஸ்திரேலியாவுடனான T20 தொடர் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற பங்களாதேஷ் அணியுடனான முழுமையான தொடர் என்பவற்றில் மத்தியூஸ் பங்கேற்றிருக்கவில்லை.இந்த நிலையில் அவர் மீண்டும் போட்டிகளுக்கு திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
IPL ஏலத்தில் இம்முறை 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு டெல்லி அணி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment