மும்பாய் இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான நேற்றைய(14) IPL இன் 12 வது போட்டியில் பெங்களூர் அணியின் சாமுவேல் பத்ரி ஹாட் ட்ரிக் சாதனையின் உதவியுடன் RCB வெற்றிபெற்று அசத்தியது.
துடுப்பாட்ட வீரர்களுக்கு கடுமையான சிரமத்தைக் கொடுத்த இந்த பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில், முதலில் ஆடிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி , விராட் கோஹ்லியின் அதிரடியான 62 ஓட்டங்கள் துணையுடன் 142 ஓட்டங்கள் குவித்தது.
பதிலுக்கு 143 எனும் இலக்குடன் களம்புகுந்த ரோஹித் சர்மா தலைமையிலான மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு ,சாமுவேல் பத்ரி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
மும்பாய் இந்தியன்ஸ் அணி துடுப்பாடும் போது, 3 வது ஓவரை வீசிய பெங்களூர் அணியின் சாமுவேல் பத்ரி 2 வது பந்தில் பார்த்திப் பட்டேலையும், 3 வது பந்தில் மக்லினகனையும்,4 வது பந்தில் நேரடியாக போல்ட் முறைமூலம் அணித்தலைவர் ரோஹித் சர்மாவையும் ஆட்டமிழக்க செய்து ஹாட் ட்ரிக் சாதனை படைத்தார்.
இந்த பருவகாலத்தில் நிகழ்த்தப்பட்ட முதல் ஹாட் ட்ரிக் சாதனை இதுவாகும்.இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய பத்ரி 9 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
சாமுவேல் பத்ரி IPL இல் விளையாடும் 6 வது போட்டியிலேயே ஹாட் ட்ரிக் சாதனை படைத்துள்ளார், அத்தோடு T20 போட்டிகள் வரலாற்றில் 20 ஓட்டமற்ற ஓவர்கள் வீசிய ஒரே பந்துவீச்சாளரும் இவராவார்.
முதல் 5 விக்கெட்டுக்களை வெறுமனே 33 ஓட்டங்களில் இழந்த மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு, பொல்லார்ட் மற்றும் குருநால் பாண்டியா சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கி மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
பொலார்ட் அதிரடியாக ஆடி 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

0 comments:
Post a Comment