இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் நான்கு மணியளவில் ஆரம்பமாகின்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் சண் றைசர்ஸ் அணிகள் மோதவுள்ளன.இப்போட்டி கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் இடம்பெற உள்ளது.
இதுவரை இருஅணிகளும் கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் விளையாடியிருந்தாலும் அனைத்துப்போட்டிகளிலும் கொல்கத்தா அணியே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இருஅணிகளும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மூன்றில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றிருக்கின்றன. இருப்பினும் நிகர ஓட்ட சராசரியின் அடிப்படையில் கொல்கத்தா புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலும் சண் றைசர்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெற்று ஈடன் காடனில் கொல்கத்தாவுடன் முதலாவது வெற்றியை சண் ரைசர்ஸ் பதிவு செய்யுமா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அணிவிபரம்.
சண் ரைசர்ஸ்:- வோனர்,தவான், டீபக் ஹூடா, யுவராஜ்,பென் கட்டிங் அல்லது கென்றிகியூஸ்,நமன் ஓஜா,விஜய் சாகர் அல்லது விபுல் சர்மா,ரசிட் ஹான்,நெகரா,ரகுமான்.
கொல்கத்தா:-கம்பீர், உத்தப்பா,மனிஸ் பாண்டி,பதான்,சூரியகுமார் யாதவ்,கொலின் டி குறோம் அல்லது சகீப் அல்லது பவல், வோக்ஸ்,நரைன்,சால்வா,உமேஸ் யாதவ்,போல்ட்.

0 comments:
Post a Comment