சுவீடனில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொறி!


சுவீடன் நாட்டில் மக்கள் கூட்டத்திற்கு லொறி ஒன்று பாய்ந்ததில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவீடன் தலைநகரான Stockholm நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தலைநகரில் உள்ள Drottninggatan என்ற பகுதியில் உள்ளூர் நேரப்படி 3 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விற்பனை நிலையம் ஒன்றில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு லொறி ஒன்று திடீரென நுழைந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடும் நிகழ்ந்துளது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தீவிரவாதிகள் தாக்குதல் என தெரிவித்துள்ள சுவீடன் ஜனாதிபதி Louis Gerhard De Geer, பொலிசார் அளிக்கும் தகவலை கேட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



இந்நிலையில், இக்கொடூர தாக்குதலுடன் தொடர்புடையதாக மூன்று சந்தேக நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment