இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும் முன்னணி துடுப்பாட்ட வீரருமான விராட் கோஹ்லி புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் முன்னணி வீரராவார்.
அவர் கிரிக்கெட்டால் மட்டுமின்றி கிரிக்கெட்டுக்கு வெளியிலும் பல சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடுகின்றார், அதன்படியே அண்மையில் கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஷ்டன் சஞ்சிகையின் சிறந்த முன்னணி கிரிக்கெட் வீரர் விருதுக்கு கோஹ்லி தேர்வானார்.
அந்த சஞ்சிகையின் அட்டைப்படத்தில் இடம்பெறவுள்ள கோஹ்லியின் புகைப்படம் எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.ICC உலக T20 போட்டித்தொடரின் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியின்போது பிடிக்கப்பட்ட படமே அட்டைப்படத்தை அலங்கரிக்கவுள்ளது.
இலங்கை பெற்றோருக்குப் பிறந்த அசங்க பிரண்டன் ரத்னாயக்க என்ற புகைப்பட கலைஞர் இந்தப் புகைப்படத்தை பிடித்திருந்தார்.இந்தப் புகைப்படம் கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் MCC யின் சிறந்த கிரிக்கெட் புகைப்படங்களுக்கான போட்டியில் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த புகைப்படம் கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்திலும் காட்ச்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு இந்த புகைப்படத்துக்கு 1000 யூரோக்கள் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த T20 போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக, வீரர்கள் மைதானத்தில் நுழையும் தருணம் , நெருப்புவரும் இயந்திரத்துக்கு அருகாமையில் வைத்து கோஹ்லி கையை சூடேற்றிக்கொள்ளும் புகைப்படமே இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment