6 மணிக்கு மேல் அலறியடித்து ஓட்டம் பிடிக்கும் பக்தர்கள் ஏன் தெரியுமா?


ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கிரடு எனும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மாலை 6 மணிக்கு மேல் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடிப்பதாக கூறுகின்றார்கள்.

ராஜஸ்தான் பாலைவனத்துக்கு அருகில் உள்ள இந்த கோயிலுக்கு செல்லும் பாதை கான்கிரிட் தளமிட்டு, அதன் இருபுற வழியிலும் அதிக செடிகள் மற்றும் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடாக காட்சியளிக்கின்றது.

மேலும் இந்த கோவிலில் மாலை நேரங்களில் வழிபடும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் தங்கினால் சிலையாக மாறிவிடுவார்கள் என்று நம்பப்படுவதால், அந்த கோவிலுக்கு 6 மணிக்கு மேல் யாரும் செல்வதில்லையாம்.

ஏனெனில் பல ஆண்டுகளுக்கு முன் அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார். அவருக்கு இங்குள்ள மக்களை பிடிக்காததால் அனைவரையும் கல்லாக மாற்றிவிட்டார் என்று கூறுகின்றனர்.

மேலும் 1000 வருடம் பழமை வாய்ந்ததாக கூறப்படும் இந்த கோவிலின் சுவர்கள் மற்றும் தூண்களில் மனித உருவங்களைக் கொண்ட சிலைகளைப் பார்ப்பதற்கு மனிதனாக இருந்து கல்லாக உருமாறியதாக தோற்றமளிக்கிறது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment