IPL - INDIAN PREMIER LEAGUE சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனையை முறியடித்தது மும்பாய் இந்தியன்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனையை முறியடித்தது மும்பாய் இந்தியன்ஸ் அணி.
IPL போட்டிகளில் பலம்பொருந்திய அணிகளாக காணப்படும் மும்பாய் இந்தியன்ஸ் அணி, இன்றைய IPL வெற்றி மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனையை முறியடித்துள்ளது.
நேற்று(16) இடம்பெற்ற குஜராத் லயன்ஸ் அணியுடனான போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றி மூலமாக இந்த சாதனையை மும்பாய் இந்தியன்ஸ் படைத்தது.
T2O போட்டிகளின் வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவுசெய்த அணியாக டோனி தலைமையிலான சென்னை அணி காணப்பட்டது. அந்த அணிக்கான IPL தடை அமுலுக்கு வரும்வரையில் 94 வெற்றிகளைக் குவித்து முதலிடத்தில் இருந்தது.
இன்றைய வெற்றி மூலமாக மும்பாய் இந்தியன்ஸ் அணி 95 வது வெற்றியை பெற்று , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முந்தியுள்ளது.இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் லங்காஷைர் அணி 90 வெற்றிகளுடன் 3 வது இடத்தில காணப்படுகின்றது.

0 comments:
Post a Comment