சொந்த மண்ணிலேயே சோதனையை சந்தித்தது கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி!


10 வது IPL தொடரின் நேற்று(16)  இடம்பெற்ற 17வது போட்டியில் கோஹ்லி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் அணிகள் போட்டியிட்டன.

சர்ச்சசைகளை அதிகம் தோற்றுவித்த இந்திய ,ஆஸ்திரேலிய அணிகளின் டெஸ்ட் போட்டிகளுக்கு பின்னர் கோஹ்லி, ஸ்மித் இருவரும் தலைவர்களாக விளங்கும் IPL அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெறுவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது.

பெங்களூர் அணியின் சொந்த மைதானமான சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோஹ்லி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

அதன்படி முதலில் ஆடிய ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் அணிக்கு ரஹானே(30) ,திருப்பதி(31), ஸ்மித்(27), டோனி(28) என்று எல்லோரும் மிக நல்ல பங்களிப்பை கொடுத்தனர்.

கடந்த 4 போட்டிகளில் வெறுமனே 33 ஓட்டங்களை மட்டுமே குவித்த டோனி, இன்று அதிரடியாக ஆடி ஒரு பந்தை மைதானத்துக்கு வெளியில் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

ஆயினும் டோனியின் ஆட்டம் இழப்பை தொடர்ந்து மேலதிக 3 ஓட்டங்கள் பெற்ற ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் அணி, 5 விக்கெட்டுக்களை இழந்து தள்ளாடினாலும், இறுதி நேரத்தில் மனோஜ் திவாரி 11 பந்துகளில் 27 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்கள் குவித்தது.

பதிலுக்கு 161 எனும் இலக்குடன் சொந்த மண்ணில் இலகுவான வெற்றியைப் பெறும் என எதிர்பார்த்த கோஹ்லி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சொந்தமண்ணில் மோசமான முறையில் வீழ்ந்துபோனது .

கோஹ்லி 28 , டி வில்லியர்ஸ் 29 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தாலும் அதன்பின்னர் வந்த வீரர்கள் சரியான பங்களிப்பை கொடுக்காத நிலையில், ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

5 வது ஓவர் முதல் 15 வது ஓவர்வரையில் எல்லைக்கோட்டைத்தாண்டி ஒரேயொரு பந்து மட்டுமே அனுப்பப்பட்டது, அந்தளவில் பூனே அணியின் பந்துவீச்சு அபாரமாக காணப்பட்டது.

இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான சார்தல் தாகூர் 3 விக்கெட்டுக்களையும், உனட்கட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

கடந்தமுறை இறுதி போட்டியில் விளையாடிய கோஹ்லி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 5 போட்டிகளில் கிடைத்த 4 வது தோல்வி இதுவாகும்.பூனே அணிக்கு 5 வது போட்டியில் கிடைத்த 2 வது வெற்றி இதுவாகும்.

ஆட்ட நாயகன் விருதை 3  விக்கெட்டுக்களை கைப்பற்றிய  பென் ஸ்டொக்ஸ் பெற்றுக்கொண்டார்.

இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் கொல்கொத்தா அணிகள் 8 மணிக்கு போட்டியிடவுள்ளன.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment