IPL தொடரின் 6 ஆவது போட்டியில் நேற்று(09) சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. நாணயசுழட்சியில் வெற்றி பெற்ற சன் ரைசேர்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் இளம் வீரர் ரஷீத் கான் சுழலில் சிக்கி 20 வர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிட்கு 135 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஸ்மித் 37 றோய் 31 கார்த்திக் 30 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர். பந்து வீச்சில் ஆப்கான் இளம் நட்சத்திரம் ரஷீத் கான் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன் ரைசேர்ஸ் வார்னர் மற்றும் ஹென்றிஹியூஸ் இன் அரைசதங்களின் உதவியுடன் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 15.3 ஓவர்களில் 140 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக ரஷீத் கான் தெரிவு செய்யப்பட்டார்.

0 comments:
Post a Comment