10 வது IPL தொடரின் நேற்று(09) இடம்பெற்ற 7 வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் , காம்பிர் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டியிட்டன.
மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பு முடிவை அறிவித்தார்.
அதன்படி முதலில் ஆடிய காம்பிர் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, மனிஷ் பாண்டேயின் 81* ஓட்டங்கள், கிறிஸ் லின் பெற்ற 31 ஓட்டங்கள் துணையுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்கள் பெற்றது. மக்லினகன் வீசிய இறுதி ஓவரில் மட்டும் 23 ஓட்டங்கள் பெறப்பட்டன.
பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.இளம் வீரர் நிதிஸ் ராணா மற்றும் ஹார்டிக் பாண்ட்யா ஆகியோர் மிக நல்ல இணைப்பாட்டம் புரிந்தனர்.இறுதி 3 ஓவர்களில் 49 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 18 வது ஓவரை விஷய ட்ரென் போல்ட் பந்து வீச்சில் 19 ஓட்டங்களும் ,19 வது ஓவரை வீசிய ராஜ்புட் ஓவரில் 19 ஓட்டங்களும் பெறப்பட்ட இலையில் மும்பை அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
ட்ரெண்ட் போல்ட் வீசுய அந்த ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய ஹார்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்க அபாரமான முறையில் வெற்றியை ருசித்தது.
நிதிஸ் ராணா 29 பந்துகளில் 50 ஓட்டங்களையும், இறுதிவரை போராடிய ஹார்டிக் பாண்ட்யா ஆட்டம் இழக்காது 11 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
மஹேல ஜெயவர்த்தன மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பின்னர் மும்பை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
ஆட்ட நாயகன் விருதை 23 வயதான நிதிஸ் ராணா பெற்றுக்கொண்டார்.

0 comments:
Post a Comment