IPL தொடரின் 18 ஆவது போட்டியில் நேற்று(17) டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் டெல்லி பெரோயிச கோட்லா மைதானத்தில் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி முன் வரிசை வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலமும் ரிஷாப் பாண்ட் இன் அதிரடி ஆட்டத்தின் உதவியுடனும் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் இளம் வீரர் ரிஷாப் பாண்ட் 16 பந்துகளில் 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களை பெற்றார். அத்துடன் சாம்சன் 39 ஷ்ரேயஸ் ஐயர் 26 பில்லிங்ஸ் மற்றும் நாயர் 21 ஊட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கோல்ட்டர் நைல் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து திணறினாலும் மனிஷ் பாண்டே மற்றும் யூசுப் பதான் இன் அதிரடி இணைப்பாட்டத்தின் மூலம் இறுதி ஓவரில் வெற்றி இலக்கை அடைந்து 4 விக்கெட்களால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டாத்தில் மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும் யூசுப் பதான் 59 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.
இவ்வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது கொல்கத்தா அணி.

0 comments:
Post a Comment