புவனேஷ்வர் குமாரின் மிகத்துல்லிய பந்து வீச்சில் நடப்பு சாம்பியன்களான சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் பரபரப்பு வெற்றி!


10 வது IPL இந்த இரு இடம்பெற்ற பரபரப்பான போட்டியில் டேவிட் டிவோர்னர் தலைமையிலான நடப்பு சாம்பியன்கள் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் மற்றும் மக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் போட்டியிட்டன.

ஹைதராபாத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி இறுதி வரைக்கும் பரபரப்பை ஏற்படுத்தியது, ஆயினும் புவனேஷ்வர் குமாரின் அதி திறமையான பந்துவீச்சு சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அற்புத வெற்றியை தேடிக்கொடுத்தது.

போட்டியில் முதலில் ஆடிய சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்கள் பெற்றது.

அணித்தலைவர் வோர்னர் 70 ஓட்டங்களையும், நாமன் ஓஜா 34 ஓட்டங்களையும்,தவான் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, யுவராஜ் முதல் பந்து வீச்சிலேயே ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் மோஹித் சர்மா , அக்சர் பட்டேல் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு 160 எனும் இலக்குடன் களம் புகுந்த கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு அதிரடி வீரர்களான அம்லா,மக்ஸ்வெல், மில்லர்,மோர்கன் ஆகிய பிரபலங்கள் சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினாலும் ஆரம்ப வீரர் மானான் வோரா இறுதிவரை பஞ்சாப் அணியின் வெற்றிக்காக போராடினார்.

இறுதி 6 ஓவர்களில் 76 ஓட்டங்கள் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட்து.15 வது ஓவரில் 20 ஓட்டங்களும், 16 வது ஓவரில் 21 ஓட்டங்களும் பெறப்பட்ட நிலையில் போட்டியில் பரபரப்பு அதிகமானது.

பின்னர் இறுதி 2 ஓவர்களில் 16 ஓட்டங்கள் எனும் வெற்றியின் விளிம்பில் பஞ்சாப் அணி இருந்தபோது,புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த வோராவையும், சரியப்பாவையும் வீழ்த்தினார்.

இறுதி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவையான நிலையில், 2008 இல் கோஹ்லி தலைமையில் இளையோர் உலக கிண்ணம் வெற்றிகொண்ட அணியில் இடம்பெற்ற சித்தார்த் கவுல், இறுதி விக்கெட்டையும் தகர்க்க சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி இரு பந்துகள் மீதமிருக்க 5 ஓட்ட்ங்களால் வெற்றி பெற்று அசத்தியது.

அதிக ஓட்டங்கள் பெற்றவருக்கான செம்மஞ்சள் நிற தொப்பியை சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் வோர்னரும் , அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரனுக்கான ஊதாநிற தொப்பியை, இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய புவனேஷ்வர்குமாரும் தாமதாக்கினார்.

தொடரின் முக்கிய இருதொப்பிகளையும் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி தம்வசப்படுத்தி தாமே நடப்பு சாம்பியன்கள் என்பதை நிரூபித்துள்ளது.

இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருது புவனேஷ்வர் குமாருக்கு கிடைத்தது.

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment