வவுனியாவில் விவசாய கிணற்றில் வீழ்ந்த யானையை காப்பாற்றும் முயற்சியின் போது அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வனப்பாதுகாப்பு அதிகாரியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு குட்டிகளுடன் இரண்டு யானைகள் நேற்று (17) முற்பகல் வவுனியா – கொம்புவைத்த குளம் பகுதியில் விவசாய கிணற்றுக்குள் வீழ்ந்தன.
பிறகு பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து யானைகளை மீற்கும் செயற்பாட்டை மேற்கொண்டனர்.
எனினும் குட்டி யானைகள் இரண்டை மாத்திரம் மீட்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் வந்து ஏனைய இரு யானைகளையும் காப்பாற்றும் செயற்பாட்டை நேற்று (17) ஆரம்பித்திருந்தனர்.
எனினும் இதன்போது இறுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவரே இவ்வாறு பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உறுதிப்படுத்தினார்.

0 comments:
Post a Comment