யாழ்.நெடுந்தீவு சிறுமி படுகொலை குற்றவாளிக்கு மரணதண்டனை!


சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் , கல்லால் அடித்து கொலை செய்த குற்றசாட்டில் குற்றவாளிக்கு, மரணதண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. குறித்த வழக்கில் நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த கந்தையா ஜெகதீஸ்வரன் என்பவரே குற்றவாளியாக காணப்பட்டு உள்ளார்.

குற்றவாளிக்கு மேல் நீதிபதி, பாலியல் குற்றசாட்டுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , 25 ஆயிரம் தண்டபணமும் அதனை கட்டதவறின் ஒரு வருட கடூழிய சிறைதண்டனையும், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 இலட்ச ரூபாய் நஷ்டஈடும் அதனை கட்ட தவறின் 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

வழக்கின் பின்னணி.

கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment