பி.பி.சி தமிழோசை வானொலி தனது 76 வருடகால சேவையை, இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிரித்தானிய அரச ஊடகமான பி.பி.சி, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை 1927ஆம் ஆண்டு முதல் நடத்திவருகின்றது. முதலில் ஆங்கிலம் மூலம் மாத்திரம் தொடங்கப்பட்ட சேவையானது, தற்போது 27 பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பு சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.பி.சி தமிழோசை வானொலி சேவையானது, தனது 76 வருடகால சேவையை ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உலக தமிழர்களிடையே நம்பகத்தன்மை மிகுந்த சேவையை தந்துவந்த பி.பி.சி. தமிழ் செய்திகள், தற்போதைய தொலைக்காட்சி மற்றும் இணையதளம் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளமையால், வானொலி ஒலிபரப்பை கேட்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறி அண்மையகாலமாக பல்வேறு பிராந்திய ஒளிபரப்புகளை நிறுத்தி வருகின்றது.
மேலும் இணைய தளம் மூலமாக பி.பி.சி தமிழோசை தொடர்ந்து ஒலிபரப்பப்படும் எனவும், இலங்கையில் மட்டும் தனியார் வானொலியுடன் இணைந்து பண்பலைவரிசை ஒலிபரப்பில் 5 நிமிட செய்திகள் மாத்திரம் ஒலி பரப்பப்படும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment