ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!


கொட்டகலை ரயில்வே கடவைக்கு அருகில் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று(திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்தே இந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 2 பிள்ளைகளின் தந்தையான வேலு சந்திரபோஸ் கொட்டகலை டிரேட்டன் கே.ஓ பிரிவை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மரண விசாரணைகளின் பின் கொட்டகலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment