கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அதிரடி ஆரம்பம் கொடுக்கும் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிரிஸ் லின்னுக்கு உபாதை ஏற்பட்டுள்ளது.
நடப்பு IPL தொடரில் அதிரடியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்து எதிரணி வீரர்களை கிலிகொள்ள செய்யும் துடுப்பாட்டத்தை கடந்த இரு போட்டிகளிலும் வெளிப்படுத்திய இவருக்கு தோள்ப்பட்டை உபாதை ஏற்பட்டுள்ளது.
இந்த தொடரில் இதுவரை அதிகமான ஓட்டங்கள் குவித்தவருக்கான செம்மஞ்சள் நிற தொப்பியும் இவரிடமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தோள்பட்டை உபாதை காரணமாக இவரால் தொடரின் மீதமான போட்டிகளில் விளையாட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment