ஹட்டன் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன், குடாகம பிரதேசத்தில் நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதி சுற்றிவளைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்த 4 பேரும் அதனை பயன்படுத்தி 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரும் ஹட்டன், குடாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடம் இருந்து 645 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளையும் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



0 comments:
Post a Comment