தவக்கால திருநாளை முன்னிட்டு இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும்
“இயேசுவின் பின்னால் பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின் ஆற்றுகை இன்றும் [04.04.2017 ] நாளையும் [05.04.2017] யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது.
குறித்த இரு நாட்களும் யாழ்ப்பாணம் நாவாந்துறை புனித பரலோக மாதா ஆலயத்தில் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இவ் ஆற்றுகையில் 200 அடி அகன்ற மேடையில் நூற்றுக் கணக்கான நாடகக் கலைஞர்கள் பங்கு கொள்ள உள்ளனர்.
யாழ் மறைமாவட் ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஆண்டகையின் ஆசியுடன் அருட் திரு அன்ரன் பாலாவுடன் கலைஞர் பாலச்சந்திரனின் நெறியாள்கையில் தயாரிக்கப்பட்ட நாடகத்திற்கான இசையினை இசைத்தென்றல் ஜேசுதாசனும் , பின்னணி இசையினை கலைவாணர் கண்ணன். முரளி , ஜெயராம், மற்றும் சஜீவனும் வழங்க, ஒளி ஒலி, வேட உடை ஒப்பனையை மீசாலை சாள்ஸ் நெறிப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.
படங்கள் – ஐ.சிவசாந்தன்

0 comments:
Post a Comment