கொழும்பு செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்திருந்த இலங்கைப் பயணி ஒருவர் நேற்றுமாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த 26 வயதுடைய சிவநாதன் நிமலன் என்ற இளைஞனே மரணமானவராவார்.
சிகிச்சைக்காக சென்னை வந்திருந்த அவர், கொழும்பு திரும்புவதற்காக நேற்றுமாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


0 comments:
Post a Comment