பல மணித்தியாலங்கள் முதலையுடன் உயிருக்கு போராடிய நபருக்கு நிகழ்ந்தது என்ன?


மட்டக்களப்பு துறைநீலாவணை 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய தெய்வநாயகம் காண்டீபன் என்பவர், 14 அடி நீளமுடைய இராட்சத முதலையின் தாக்குதலுக்குள்ளாகி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்துமேலும் தெரியவருவதாவது, கட்டுவலையுடன் ஞாயிற்றுக் கிழமை (16) அதிகாலை 02.30 மணியளவில் வீட்டில் இருந்து  வெளியேறிய குறித்த நபர் தோணியில் இருந்து கொண்டு மீன் பிடிக்கும் போது,தோணியின் அடிப்பாகத்தை முதலை உடைத்து காலைபிடித்து இழுத்ததாகவும், தோணி இரண்டாக உடைந்து தோணிக்குள் நீர் நிரம்பியதால் தான் நீருக்குள் இழுக்கப்பட்டதாகவும், முதலையின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு பலமணி நேரம் எடுத்தது என்றும், பெரும் பிரயத்தனதுக்கு மத்தியில் ஏனைய மீனவர்களால் முதலையிடமிருந்து காப்பற்றப்பட்டதாகவும் இனிதான் மீன் பிடிக்க செல்வதில்லை எனவும் இவ்வாறு தாக்குதலுக்கிலக்கான தெய்வநாயகம் காண்டீபன், கூறியுள்ளார்.

காலிலும், கால்பெருவிரலிலும் பலத்தகாயங்ககுள்ளான குறித்தநபர், அருகில் மீன்பிடித்த ஏனைய மீனவர்களால் அதிகாலை 4.00 மணியளவில் காப்பாற்றப்பட்டு, கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment