வவுனியா கலுகுன்னாமடுவ பகுதியில் இன்று (16.04.2017) காலை 11.00மணியளில் நடந்த வாகன விபத்து ஏழு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,
கலுகுன்னாமடுவ பகுதியில் பாதையில் அருகே தரித்து நின்ற கார் வீதியினை விட்டு கிழே இறங்க முற்ப்பட்ட சமயத்தில் புத்தளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் காருடன் மோதி விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் இரு வாகனமும் வீதியை விட்டு மதகுக்குள் பாய்ந்ததில் வானில் பயணித்த சாரதி உட்பட அறுவரும் காரின் சாரதியும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரற்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்




0 comments:
Post a Comment