வரலாறு படைத்த வங்கதேசம், T20 தொடரையும் வெற்றியுடன் முடித்தது!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 வதும் இறுதியான T20 போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

இந்தப் போட்டியில் அபாரமான முறையில் திறமையை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணி 45 ஓட்ட்ங்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதோடு தொடரையும் 1-1 என்று வெற்றிகரமாக முடித்துள்ளது.

இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணிதலைவர் முதலில் துடுப்பெடுத்தாட விருப்பு வெளியிட்டார் .அதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பம் அமோகமாக இருந்தது.

ஒவ்வொரு வீரரும் பெறுமதியான ஓட்டங்களைக் குவிக்க பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்டி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்ட்ங்கள் பெற்றது.

சாகிப் அல் ஹசன் 38 , இம்ருல் கயிஸ் 36 , சவுமியா சர்க்கார் 34 ஓட்டிங்கள் குவித்தனர்.இலங்கையின் பந்து வீச்சில் ஹாட் ட்ரிக் சாதனை நிகழ்த்திய மலிங்கா மொத்தமாக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

குசல் பெரேராவின் அதிரடியில் முதல் போட்டியை இலங்கை அணி வெற்றிகொண்ட நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றுவதற்கு 177 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

ஆயினும் இலங்கையின் வீரர்கள் வரிசையாக ஆட்டம் இழந்தனர். தனித்துநின்று போராடிய கப்புகெதர அரைச்சதம் பெற்றார்.பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் முஸ்தாபிகுர் ரஹ்மான் 4 விக்கெட்டுக்களையும், சாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

டெஸ்ட் , மற்றும் ஒருநாள் தொடர் என்பன 1-1 என்று சமநிலையில் முடிவடைந்த நிலையில், இந்த T20 தொடரையாவது முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இலங்கை அணி ஈடுபட்டாலும் வங்கதேசம் அதற்கும் இடம்கொடுக்காது வரலாறு படைத்து அத்தனை தொடர்களையும் சமன் செய்துள்ளமை பாராட்டதக்கதே.

பங்களாதேஷ் அணியின் தலைவர் மொட்ராசா விளையாடிய இறுதி T20 போட்டி இதுவென்பதால் பங்களாதேஷ் அணி, தங்கள் தலைவரை வெற்றியுடன் வழியனுப்பியுள்ளது.

இன்றைய போட்டியின் நாயகனாக சாகிப் அல் ஹஸனும், தொடர் நாயகனாக லசித் மலிங்கவும் தேர்வாகினர்.
இலங்கையரான சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பில் வங்கதேசம் மிகத்திறமையாக விளையாடியமை,ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை கொஞ்சம் சிந்திக்க செய்திருக்கும் எனலாம்.

இனிவரும் நாட்களிலாவது ஸ்ரீலங்கா கிரிக்கெட், இலங்கையின் திறமையாளர்களை ,இலங்கை கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்பதே எல்லோரது அவாவுமாகும்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment