ஹட்டனில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை மீட்கப்பட்ட குறித்த சடலம், ஹட்டன் – அலுத்கம பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பொண்ணுசாமி கணேஷன் (வயது – 47) என்பவருடையதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
முகம் மற்றும் உடற்பாகங்களில் காயங்களுடன் இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதால், இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

0 comments:
Post a Comment