64 சக்தி பீடங்களில் ஒன்றான திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று (சனிக்கிழமை) பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது.
காலை 7.30 மணிக்கு நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அதிதியாக கலந்துகொண்டதோடு, ஆயிரக்கணக்கான பக்த அடியார்களும் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு, அம்பாளின் இரதத்தின் முன்பாக சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
கடந்த மாதம் 30ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, நாளை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.















0 comments:
Post a Comment