ஆனமடு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் பயணித்த ஜீப் வண்டி பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) ஆனமடு – நவகத்தேகம பிரதான வீதியின் பெரியகுளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜீப் வண்டி பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென வீதியின் குறுக்காக சென்ற மாட்டின் மீது மோதுவதை தவிர்க்க முற்பட்ட போது, ஜீப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து, பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது காயமடைந்த ஆனமடு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட மூன்று பொலிஸார் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.






0 comments:
Post a Comment