பலாலி வீதியில் ஆலடிச் சந்தியில் நேற்று மாலையில் மதுபோதையில் பல்சர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் ஒரே நேரத்தில் ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரு மோட்டார் சைக்கிள் என்பனவற்றினை மோதித் தள்ளினர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கோண்டாவில் திசையை நோக்கிப் பயணித்த பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மிக வேகமாகப் பயணித்தமையினாலேயே மேற்படி விபத்துக்கள் இடம்பெற்றன.
இதில் எதிர் திசையில் பயணித்த வாகனங்கள் மீது திசைமாறிச் சென்று முதலாவதாக ஓர் முச்சக்கர வண்டியை மோதி நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் முச்சக கர வண்டியின் பின்னால் வந்த ஓர் மோட்டார் சைக்கிள் மோதித்தள்ளினர். இதன் பின்பும் வேகம் கொண்ட மோட்டார் சைக்களின் மூன்றாவதாக ஓர் மோட்டார் சைக்கிளையும் மோதித்தள்ளியது.
இதில் மூன்றாவதாக மோதிய மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்து 10 தினங்களே ஆன நிலையில் இலக்கத்தகடு கூடப் பொருத்தாக நிலையில் முழுமையாக சேதமடைந்த்து. இவ்வாறு மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டபோதும் மாலை 5.20ற்கு பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
இவ் விபத்தின்போது வேகமாகப் பயடித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





0 comments:
Post a Comment