யாழ். நாவற்குழியில் ரயிலின் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் ரயிலில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (சனிக்கிழமை) காலை பயணித்த ரயிலின் மீதே இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வீச்சு தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த இராணுவ சிப்பாய், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவசக்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment