நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் அசாதாரண காலநிலை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தத் தகவலை வெளியிட்டார்.
இதேவேளை, 4 இலட்சத்து 93 ஆயித்து 455 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் 185 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 91 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.









0 comments:
Post a Comment