யாழ். விஜயம் செய்த 300 பிக்குகள் நயீனாதீவில் பூஜை வழிபாடு!

தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 பௌத்த மத துறவிகளால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் விஷேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த தென்னிலங்கை அமைப்பை சேர்ந்த பௌத்த துறவிகளால் கடந்த வியாழக்கிழமை இவ் விஷேட பூஜை வழிபாடுகளானது யாழ்.நாவற்குழி பௌத்த விகாரையில் இடம்பெறவிருந்தது.

எனினும் பின்னர் சில காரணங்களால் பிற்போடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பூஜை வழிபாடுகளானது இடம்பெற்று வருகின்றது.


இதன்படி  இன்றைய தினம் இடம்பெற்றுவரும் விஷேட பௌத்த மத துறவிகளது பூஜையானது நயீனாதீவு நாக விகாரையில் இடம்பெற்றுவருகின்றது.


இதேவளை கடந்த வியாழக்கிழமை நாவற்குழி பௌத்த விகாரையில் நடாத்துவதற்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் அங்கு சிங்கள பௌத்த துறவிகளது விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையடுத்து குறித்த பௌத்த விகாரையின் விகாராதிபதி அவ் பூஜை அங்கே நடாத்துவது சில பாதகமான நிலமைகளை ஏற்படுத்தி விடும் என கருதி பூஜைகளை அங்கே நடாத்துவதற்கு அனுமதியை மறுத்திருந்தார்.

இதனையடுத்து குறித்த பூஜையானது நயீனாதீவு நாக விகாரையில் நடாத்த ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இன்றைய  தினம் ஆறு பேரூந்துகளில் 300 பௌத்த மத துறவிகள் அங்கு புறப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இன்று மாலையளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த நிலையில் இன்று இரவு நயீனாதீவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.






Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment