பிரசித்தி பெற்ற யாழ். சுன்னாகம் கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் முத்தேர் பவனி 24.05.2017 புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
காலை 09:00 மணியளவில் வசந்த மண்டபப் பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து சுவர்ணாம்பிகை சமேத ஸ்ரீ பொன்னம்பல சுவாமி, விநாயகர், முருகப்பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய மூர்த்திகள் உள்வீதியில் மெல்ல மெல்ல அசைந்தாடி வீதி வலம் வந்தனர்.
தொடர்ந்து முற்பகல்-10. 30 மணியளவில் சுவர்ணாம்பிகை சமேத ஸ்ரீ பொன்னம்பல சுவாமி மற்றும் ஏனைய மூர்த்திகள் முத்தேர்களில் ஆரோகணம் செய்தனர்.
அடியவர்களால் சிதறு தேங்காய் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க முத்தேர் பவனி ஆரம்பமாகியது.
ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் பிரதான தேரின் வடம் தொட்டிழுத்தனர்.
ஆண் அடியவர்கள் காவடிகள் எடுத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும் நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.
முத்தேர்களும் பிற்பகல்-12.30 மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தன. ஆலய இரதோற்சவத்தைக் காணப் பெருமளவு அடியவர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.





0 comments:
Post a Comment