ரஜினியைச் சுற்றி ஆயிரம் அரசியல் சர்ச்சைகள் இருந்தாலும், அவர் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்துக்குத் தயாராகி விட்டார். தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் உருவாகவுள்ளது. ரஜினியின் 164-வது படமான, இதன் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தனுஷ் கூறியிருந்தார்.
இந்நிலையில், படத்தின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்துக்கு 'காலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், கரிகாலன் என்ற சப் டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. கரிகாலனின் சுருக்கம்தான் காலா என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக, வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், கபாலி பட கெட் அப் சாயிலிலேயே, ரஜினியின் லுக் உள்ளது. படத்தில் நடிப்பவர்களின் பெயர்கள் சிறிதுநேரத்தில் வெளியிடப்படும் என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


0 comments:
Post a Comment