ரஜினி நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே, அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இன்று படத்தின் பெயர் வெளியாகி ரசிகர்களை இன்னும் குஷியாக்கிவிட்டது.
மும்பையில் வாழும் நெல்லை மக்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் வெளியாகாத நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என ட்விட்டரில் கூறியிருந்தார். அதே போல் ரஜினி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டரில் வெளியானது.


0 comments:
Post a Comment