சம்பந்தனிடம் மன்னிப்புக்கோரிய வடக்கு மாகாணம்!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் பிரேரணையாக முன் மொழியாது. அதனை விசேட அறிக்கையாக சபையில் சி.வீ.கே.சிவஞானம் அறிவித்தார்.

வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வான இன்றைய தினம் அவசர பிரேரணையாக குறித்த விடயம் கொண்டு வரப்பட இருந்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இன்றைய தினம் அதனை விசேட அறிக்கையாக சபையில் அவைத்தலைவர் அறிவித்தார்.

அதன் போது, அவைத்தலைவரினால் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உரையை குறுக்கீடு செய்து குழப்பிய அநாகரிக செயலை இந்த சபை கண்டிப்பதுடன் அவருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதுடன் , மன்னிப்பையையும் இந்த சபை கோருகின்றது என தெரிவித்தார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment