நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மக்கள் தொடர்ந்தும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நேற்று (25.05.2017)ல் இருந்து இன்று வரை பெய்துகொண்டிருக்கும் மழையினால் பல பிரதேசங்கள் வெள்ள அனர்த்தமும் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அவிசாவளை பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களில் களனி கங்கையில் பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அவிசாவளையில் இருந்து கொழும்பு, இரத்தினபுரி, ஹட்டன் மற்றும் கேகாலை பிரதேசங்களுக்கு அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறைகளில் கடமை புரிவோர் தொழிலுக்கு மற்றும் ஏனைய தேவைகளுக்காக செல்லும் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர்.
அத்துடன், பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளும் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. தல்துவ, கெட்டயேத்த, பாஹன (புவக்பிட்டிய) இடங்களில் இவ்வனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளது.
இது தொடர்பாக சீதாவாக்கை, ஏலியகொடை பிரதேச செயலகங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மழை தொடரும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளத்தால் மக்கள் பெரும் சிரமங்களை எதிநோக்கவேண்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




0 comments:
Post a Comment