வலி.வடக்கு தையிட்டி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் வெளியிடப்பட்டுவருகின்றது. பலாலி படைத்தளம் மீது தாக்குதல் நடாத்த ஆள ஊடுருவி புலிகள் பகுக்கிவைத்தவையாக இருக்கும் என சில தரப்பும் இவை படையினருடைய ஆயுதங்கள் என சில தரப்பினரும் கருத்துக்கள் வெளியிட்டுவந்த நிலையில் குறித்த ஆயுதக்கிடங்கு வெடிவைத்துத் தகர்க்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த இரு வாரத்திற்கு முன்னரும் பின்பு கடந்த நான்கு நாட்களாகவும் பெருந் தொகையான வெடி பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. கைக்குண்டுகள் மாத்திரம் சுமார் ஐந்நூறிற்கும் மேல் மீட்கப்பட்டுள்ளன. மேலதிகமாக உள்ள வெடிபொருட்களை மீட்க முடியாத காரணத்தினால் அவை கிணற்றினுள்ளேயே வைத்து வெடிக்க வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் மக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்பட்ட வலி.வடக்கு தையிட்டி ஜே 247 கிராமசேவகர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பெருந்தொகையான வெடி பொருட்கள் மீட்கப்பட்ட போதும் சில வெடிபொருட்களை மீட்பதற்கு முடியாமல் அபாயகரமாக இருப்பதனால் அவற்றை கிணற்றினுள்ளேயே வைத்து வெடிக்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் மீட்கப்பட்ட வெடிபொருட்களது இயங்கு காலம் அண்மையானதென சொல்லப்படுகின்றது.1990ம் ஆண்டினில் படையினர் வசம் வீழ்ந்த இப்பகுதியினில் விடுதலைப்புலிகளால் கைவிடப்பட்ட வெடிபொருட்களென அடையாளப்படுத்தப்பட்டால் அதன் புதைக்கப்பட்ட காலம் 27 வருடங்களிற்கு மேலதிகமாகும்.
ஆனால் இப்பகுதியினில் 2007ம் ஆண்டு காலப்பகுதியினில் கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வெடிபொருட்கள் ஆள ஊடுவுரும் படையினர் பயன்படுத்திவிட்டு கிணற்றுள் போடப்பட்வையாக இருக்காம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.




0 comments:
Post a Comment