வெள்ளம் மற்றும் மண்சரிவு முதலான இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மாலை வரையில் 180 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 5இலட்சத்து 88ஆயிரத்து 028 ஆகும். காயமடைந்தோர் 109 மற்றும் 110 பேர் காணாமல் போயுள்ளதாவும் இடர் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
368 நலன்புரி முகாம்களில் 76 ஆயிரத்து 902 பேர் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளுக்கு தரைமார்க்கமாக செல்லமுடியாத இடங்களுக்கு முப்படையினரின் உதவியுடன் அப்பிரதேசங்களில் சிக்கியிருந்த மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கை தீவிரமாக்ககப்பட்டு வருகின்றது.
பல இடங்களில் குடிநீர் உணவின்றி இருந்தவர்களுக்கு இன்றைய தினம் நிவாரண உதவிகள் வழங்க கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தடைப்பட்டிருந்த மின்விநியோகங்கள் சீர்செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கபட்டுவருகின்றது.


0 comments:
Post a Comment