தேசிய டெங்கு ஒழிப்பு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய சுகாதார கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒழுங்கமைப்பில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் வித்தியாலய அதிபர் ஸ்ரீதரன் தலைமையில் டெங்கு ஒழிப்பு விசேட விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது .
மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விசேட செயல்திட்டத்திற்கு அமைய பாடசாலை சுற்றுசூழல் மற்றும் பாடசாலையை அண்மித்த கிராம பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன .
இதன் ஊடாக சுமார் 13 ,500 கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டன இவ்வாறு கொள்கலன்கள் சேகரிக்கப்பட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .
இதேவேளை இந்த செயல்திட்டத்திற்கு அனுசரணையாக செயல்பட்ட மயிலம்பாவெளி கருணாலயம் நிர்வாகம் பாடசாலை சுற்றுசூழலை துப்பரவுசெய்யும் உபகரணங்களும் வழங்கப்பட்டன . .
இந்நிகழ்வில் மாணவர்களின் விழிப்புணர்வு நாடகங்களும் இடம்பெற்றதுடன் நிகழ்வில் அதிதிகளாக செங்கலடி பிரதேச செயலாளர் உதயஸ்ரீ , செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இ .ஸ்ரீநாத் , மட்டக்களப்பு மாவட்ட தொற்று நோயியல் வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி . தர்ஷினி காந்தருபன் ,மாவட்ட பூச்சியியலாளர் திருமதி தர்ஷினி குனநீதன் ,ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி .. கலையரசி துரைராஜசிங்கம் , செங்கலடி மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் எஸ் . கிருஷ்ணபிள்ளை , செங்கலடி பொதுசுகாதார பரிசோதகர் எஸ் . தபேந்திர ராஜா , மயிலம்பாவெளி பொதுசுகாதார பரிசோதகர் மொகமட் பைறூஸ் மற்றும் மயிலம்பாவெளி கருணாலயம் நிர்வாக உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment