தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகம் சுங்கப் பிரிவால் தடுத்து வைப்பு!


ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகம் இலங்கை அரசின் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதியில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா இல்லை தொடர்ந்து தடுத்து வைப்பதா என்பதை தீர்மானிக்கப்படும் என்று யாழ் சுங்கப் பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.

நில ஆக்கிரமிப்பின் அரசியல் குறித்தும், வரலாற்றில் அபகரிக்கப்பட்டு அடையாள அழிப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும் குறிப்பிடும் இந்த நூல், 2009இற்குப் பின்னர் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச, இராணுவ நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அதற்கெதிரான தன்னெழுச்சிப் போராட்டங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளது.

நில ஆக்கிரமிப்புக்களின் வழியாக தமிழர்களின் சமயம், பொருளாதாரம், பண்பாடு முதலியவற்றை ஒடுக்குவதையும் நில ஆக்கிரமிப்பின் ஊடாக இன அழிப்பு இடம்பெறுகின்றமை பற்றியும் இந்த நூல் பேசுகின்றது.

இந்த நூலை தமிழகத்தின் பிரசித்தமான எதிர்வெளியீடு என்ற பதிப்பகம் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment