கோவாவில் 3 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு ஒருநிமிடம் முன்னதாக மும்பைவந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ்!


மும்பை சி.எஸ்.டி.யில் இருந்து கோவாவில் உள்ள கர்மாலி இடையேயான தேஜஸ் ஏ.சி. ரெயில் சேவை கடந்த மே மாதம் தொடங்கியது.

குளு குளு ஏ.சி. வசதியுடன் தயாரிக்கப்பட்ட உலகத்தரத்திலான தேஜஸ் ரெயிலில் குறைந்த தண்ணீர் செலவில் அதிக சுகாதாரம் காக்கப்படும் பயோ – வேக்கம் கழிவறைகள், தண்ணீர் அளவு காட்டும் இன்டிகேட்டர்கள், தானியங்கி கதவுகள், தீ, புகையை கண்டறியும் கருவிகள், அதிநவீன ஏர் பிரேக், கண்காணிப்பு கேமரா, ஒவ்வொரு பயணிக்கும் ஜி.பி.எஸ். வசதி கொண்ட தொடு திரை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது.

பயணம் செய்யும் பயணிகளுக்கு செய்தித்தாள், குடிநீர் பாட்டில் போன்றவை விநியோகிக்கப்படும். மேலும் சிறந்த சமையல்கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிமாறப்படும் என பல்வேறு சேவைகள் ரெயிலில் உள்ளது. தேஜஸ் ரெயில்கள் சி.எஸ்.டி. – கர்மாலி இடையே சாதாரண காலத்தில் வாரத்திற்கு 5 நாட்களும், மழை காலத்தில் (ஜூன் 10–ந் தேதி முதல் அக்டோபர் 31 வரை) வாரத்திற்கு 3 நாட்களும் இயக்கப்படுகின்றன. மும்பை ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும்விதமாக ஒரு நிகழ்வு நடந்தது.

கோவாவில் இருந்து சுமார் 3 மணிநேரங்கள் கால தாமதமாக புறப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக மும்பை வரும் நேரத்தைவிட ஒரு நிமிடம் முன்னதாக வந்தது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம் செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் கோவாவில் காலை 7:30க்கு புறப்பட்டு இரவு 7.45க்கு மும்பை வருவது வழக்கமாகும். ஆனால் நேற்று தேஜஸ் எக்ஸ்பிரஸ் காலை 10:30 மணியளவில் கோவாவில் இருந்து புறப்பட்டது. மூன்று மணி நேரம் கால தாமதமாக புறப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 7.44 மணிக்கு மும்பையை வந்தடைந்தது.

தேஜஸ் தன்னுடைய மழைகால பயணத்தை தொடங்கிய முதல் நாளிலே மிகவும் வேகமாக மும்பை வந்து உள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில் மழை காலங்களில் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment