யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வு, யாழ்.பொது நூலக முன்றலில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது முன்றலில் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் ஆராய்ச்சியாளரும், நூலகம் எரிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து மாரடைப்பில் உயிரிழந்தவருமான வண. பிதா தாவீது அடிகளார் மற்றும் யாழ். பொது நூலகத்தின் நிறுவுனர் செல்லப்பா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் வட. மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வட. மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment